1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (18:16 IST)

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தன்’ டீசர்

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த டீசர் வெளியாகி சூர்யா ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன 
 
 ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த டீசரில் சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்று உள்ளன. மேலும் ரொமான்ஸ் காட்சிகள் பஞ்ச் டயலாக்குகள் மற்றும் பிரமாண்டமான பாடல் காட்சிகளில் ஆகியவையும் இந்த டீசரில் உள்ளன 
 
சூர்யாவின் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்யப்படும் வகையில் இந்த டீசர் உள்ளது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது