செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (13:08 IST)

விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர். ரிலீஸ் தேதி!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்.  திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசுக்கு தயாராகி விட்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ‘எஃப்.ஐ.ஆர்.  படத்தை பிப்ரவரி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் அனேகமாக இந்த படம் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்த தகவலை விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார் என்பதும் அஸ்வத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷ்ணு விஷால் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படம் அவருக்கு பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது