1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழுக்கு தலைவணங்கு: ஆர்பிஐ அதிகாரிகளுக்கு கமல்ஹாசன் கண்டனம்!

தமிழுக்கு தலைவணங்கு: ஆர்பிஐ அதிகாரிகளுக்கு கமல்ஹாசன் கண்டனம்!
நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க மறுப்பது விதி மீறல் மட்டுமல்ல மாநிலத்தில் தாய்மொழியை அவமதிப்பது ஆகும் என்றும், நிகழ்ந்த சம்பவம் இனிமேல் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழுக்கு தலை வணங்கு என்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ஆர்பிஐ அதிகாரிகள் மீது தகுந்த வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது