புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 ஜனவரி 2021 (08:50 IST)

சிக்ஸ் பேக் உடலுக்காக நான் குடிப்பதே இல்லை… தன் மீதான புகாருக்கு விஷ்ணு விஷால் பதில்!

அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடித்துவிட்டு ரகளை செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து விளக்கமளித்துள்ளார் விஷ்ணு.

சமீபத்தில் விஷ்ணு விஷாலில் அப்பா ( முன்னாள் போலீஸ் அதிகாரி) நடிகர் சூரியை மிரட்டியதாக அவர் போலீஸில் புகார் அளித்ததன் பேரில் அவர்கள் மீது  வழக்குப்பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ரகளையில் ஈடுபட்டதாகவும், அவர் தினம்தோறும் தனது நண்பர்களுடம் குடித்துவிட்டு ரகளையில் ஈட்டுபட்டு வருவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் மீது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களின் சங்கம் சார்பில் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த புகாரை விஷ்ணு விஷால் முழுவதுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து ‘நான் அந்த குடியிருப்புக்கு வந்தே 2 மாதங்கள்தான் ஆகின்றன. நான் இரவு நேரப் படப்பிடிப்புக்கு எல்லாம் செல்லும் போது குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். என்னை அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றவே போலியான புகார்களை அளிக்கின்றனர். ஒரு படத்தின் தோற்றத்துக்காக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன். அதனால் கடந்த இரண்டு மாதங்களாக நான் குடிப்பதே இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.