வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (14:05 IST)

விஷால் உருவாக்கிய 'V Shall' அப்ளிகேசன் என்ன செய்யும் தெரியுமா?

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாள சங்க தலைவருமான விஷால் ஏற்கனவே நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அவரும் அவருடைய நண்பர்களும் இணைந்து  'V Shall' என்ற அப்ளிகேசனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேசன் என்ன செய்கிறது தெரியுமா?


 


உலகில் எவ்வளவோ ஏழை, எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளே இல்லாமல் தவித்து வருகிறார். அதேபோல் இதுபோன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இவ்வாறு உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இந்த அப்ளிகேசன் இணைக்கின்றது.

இந்த அப்ளிகேசன் மூலம் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களும், உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவவோ, உதவி பெறவோ செய்யலாம். இந்த அப்ளிகேசன் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.