செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:22 IST)

நானும் அங்கதான் ஆடியோ லான்ச் நடத்துவேன்… அடம்பிடிக்கும் விஷால்!

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் நடத்த வேண்டும் என படத்தின் நாயகன் விஷால் பிடிவாதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகியோரின் இசை வெளியீடு நேரு ஸ்டேடியத்தில்தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.