செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 26 ஜூலை 2020 (07:08 IST)

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 9,251 பேருக்கு கொரோனா உறுதி !

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரொனா தொற்றினால்  அனைத்து நாடுகளும் பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் பதிமூன்று லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 31 ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகளவு கொரொனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று  ஒரே நாளில்  மேலும் 9,251 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் புதிதாக 9,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,66,368 ஆக உயர்ந்துளது.

அம்மாநிலத்தில் கொரொனா தொற்றால் மேலும் 257 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.