தமன்னாவுடன் இணையும் விஷால்!
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியானது.இதில் மேகா ஆகாஷ், கேத்ரீனா தெரசா, மஹத், நசீர், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் பிரபு உள்பட பலர் நடித்து இருந்தனர்.
சுந்தர் சி விஷாலை வைத்து 2015ம் ஆண்டு ஆம்பள படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் ஆமபள டீம் மீண்டும் இணைகிறது.விஷாலை வைத்து மீண்டும் புதிய படத்தை எடுக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார். இந்த படத்தை டிரெண்ட்ஆர்ட்ஸ் புரொடக்சன் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார்.
பிப்ரவரி மாத மத்தியில் ஷுட்டிங் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தாமதாக மார்ச் 15ம் தேதி ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளதாக உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
விஷால் தற்போது வெங்கட்மோகன் இயக்கத்தில் அயோக்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது.