செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (12:39 IST)

மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது: விஷால்

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு லஞ்சம் பெற்றதாக மும்பை சென்சார் போர்டு மீது புகார் அளித்த விஷால், அந்த புகார் குறித்து நடவடிக்கை எடுத்த மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்
 
தனது புகாரின்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக மத்திய அரசுக்கு நன்றி என்று கூறிய நடிகர் விஷால் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை  எழுகிறது என்று கூறியுள்ளார்.
 
மேலும் ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக நாட்டுக்கு சேவையாற்ற அதிகாரிகளை இது ஊக்குவிக்கும் என்றும்  ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் எனக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வை தருகிறது என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran