1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (13:12 IST)

தளபதி 67 படத்தில் நான் இல்லை… அறிவித்த விஷால்!

நடிகர் விஷால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

விஜய் சமீபத்தில் வாரிசு படத்தை முடித்த நிலையில் இப்போது இந்த படத்தில் கவனம் செலுத்த உள்ளார். இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, விஷாலிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஷால் அந்த படத்தில் நடிக்கவில்லை என அறிவித்துள்ளார். லத்தி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் “எனக்கு அடுத்தடுத்து நிறைய படங்கள் உள்ளன. அதனால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நான் விஜய் படத்தை இயக்க முயற்சிப்பேன்” எனக் கூறியுள்ளார்.