1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (18:52 IST)

தளபதி 67 இந்த ஹாலிவுட் படத்தின் கதைதானா… லேட்டஸ்ட் தகவல்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்துக்கு தற்காலிகமாக தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  விஜய் சமீபத்தில் வாரிசு படத்தை முடித்த நிலையில் இப்போது இந்த படத்தில் கவனம் செலுத்த உள்ளார். இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜை நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும், பூஜை சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என விஜய் கண்டீஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் கதை “தி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்” என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தபடத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் லோகேஷ் அதிகாரப்பூர்வமாக பெற்றுதான் உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.