திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (20:34 IST)

'விஸ்வாசம்' திரையிடும் திரையரங்குகளில் 'திருமணம்': பிரபல இயக்குனர் திட்டம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் முதல் காட்சி இன்னும் ஒருசில மணி நேரங்களில் திரையிடப்படவுள்ளது. அஜித் பெயரை திரையில் பார்க்க கடந்த ஒன்றரை வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று திரையில் தலபொங்கல் தரப்படவுள்ளது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் சேரன் இயக்கி வரும் 'திருமணம்' படத்தின் டிரைலரை வெளியிட சத்யஜோதி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் 'திருமணம்' திரைப்படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விஸ்வாசம் திரையிடும் திரையரங்குகளில் எல்லாம் 'திருமணம்' திரைப்படத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.. ஒப்புதல் தந்த சத்யஜோதி நிறுவனத்துக்கும் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கியூப் நிறுவனத்துக்கும் நன்றி.. விஸ்வாசம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.