திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:20 IST)

விஜய் தேவரகொண்டா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக திவ்யன்ஷா கவுசிக்!

இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்த படம் கீதகோவிந்தம். மிகக்குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் இடம்பெற்ற இங்கேம் காவலே என்ற பாடல் சென்சேஷனல் ஹிட் ஆனது.

இதையடுத்து பேன் இந்தியா அளவில் வளர்ந்துவிட்ட விஜய் தேவரகொண்டா இப்போது பல மெஹா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மீண்டும் கீதா கோவிந்தம் கூட்டணி இணைந்துள்ளது. பரசுராம் இயக்கும் புதிய படத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கிறார். இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக திவ்யன்ஷா கௌசிக், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சித்தார்த் நடித்த டக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.