விஷால் படத்தின் கதை என்னுடையது… இணை இயக்குனரின் குற்றச்சாட்டு!

Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (17:58 IST)

விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் கதை தன்னுடையது என சக்ரா படத்தின் இணை இயக்குனர் ஒருவர் உரிமை கோரியுள்ளாராம்.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதைப் பார்த்த சக்ரா படத்தின் இணை இயக்குனர் விஜய் என்பவர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் கே வி பிலிம்ஸ் பாலு தயாரிப்பிற்காக சொன்ன கதைதான் என்று சந்தேகப்படுகிறாராம். இதை விஷாலுக்கு அவர் ஏற்கனவே சொல்லியுள்ள நிலையில் இப்போது அவரே வேறு ஒரு இயக்குனரை வைத்து எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :