1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:35 IST)

விஷாலின் 31வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது 
 
விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளதுள்ளனர் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் பேட்டரி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பாறிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து இவ்வருடத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது