1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (16:11 IST)

என் கேரியலில் இது முக்கியமான படம் - முன்னணி நடிகை

Shooting
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சுனைனா. இவர் தற்போது மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார்..

இப்படத்திற்கு சதீஸ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பவி.கேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து நடிகை சுனைனா கூறியுள்ளதாவது:  நான் சாதாரண ஹவுஸ் ஒய்ஃபாக ரெஜினா என்ற கேரக்டரில்  நடிக்கிறேன். இப்படத்தின் இயக்குனர் கதையைக் கூறிய விதம் என்னைக் கவர்ந்தது. அதனால், இந்தக் கேரக்டரில் நடிக்கத்தூண்டியது.என் கேரியலில் இந்தக் காதாப்பாத்திரம் முக்கியமான படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்