விஷாலின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு: பான் - இந்தியா படம் என தகவல்!
பிரபல நடிகர் விஷால் தற்போது வீரமே வாகை சூடும் மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பறிவாளன் 2 கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எனிமி படத்தை தயாரித்த வினோத் குமார் தயாரிக்கவுள்ளார்.
இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது