1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (17:57 IST)

'விஜய் சேதுபதி' பட டீசரை பாராட்டிய விஷால்

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் டீசர் ரிலீஸாகியுள்ள நிலையில்,இதற்க்கு நடிகர் விஷால்  வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
 
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். ஏற்கனவே விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான தர்மதுரை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இணைந்துள்ளமாமனிதன் படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்திற்கு முதன்முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
 
மாமனிதன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் டீசர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகி உள்ளது. 
 
இந்நிலையில் நடிகர் விஷால் இப்படத்தின்   இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள்  தெரிவித்துள்ளார். 
 
அதில், இயக்குனர் சீனு ராமசாமிக்கும், நண்பர் விஜய்சேதுபதிக்கும், யுவனுக்கு எனது வாழ்த்துக்கள் எனது தெரிவித்துள்ளார்.  மேலும், நடிகர் விஷாலின் ரசிகர்களும் இப்படத்தின் டீசரை கொண்டாடி வருகின்றனர்.
 
இதற்கு இயக்குனர் சீனு ராமசாமி நாரி தெரிவித்துள்ளார்.