திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (11:34 IST)

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

mark antony1
விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது. விஷால் இதில் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷால் ஜோடியாக ரிதுவர்மா நடித்து வரும் இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் தான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
mark antony1