செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 7 மே 2022 (16:21 IST)

அக்னி நட்சத்திர காலத்தில் நாம் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன....?

அக்னி நட்சத்திர காலகட்டம் என்பது தானம் செய்ய வேண்டிய காலம். குறிப்பாக வறியவர்களுக்கு, உணவு, நீர், உடை ஆகியனவற்றைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் தானம், மிகுந்த புண்ணிய பலனை ஏற்படுத்தும்.


குறிப்பாக இன்று நாடு இருக்கும் நிலைமையில் நாம் நம்மாலான உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் நமக்குப் புண்ணிய பலம் கிடைக்கும் என்பதோடு மனநிறைவும் உண்டாகும்.

இந்தக் காலகட்டத்தில் நாம் சிவபெருமான், சூரியபகவான், அக்னி பகவான் ஆகியோரை வழிபடுவதோடு அவரவர்கள் வாழும் எல்லையிலிருக்கும் மாரியம்மன் முதலிய பெண் தெய்வங்களையும் வழிபடுவது நல்லது.

வெயிலிலிருந்து காத்துக்கொள்ள அக்னி பகவானை வழிபடலாம்.. தான, தர்மங்கள் செய்யலாம். முக்கியமாக கோயிகளுக்கு செல்வதும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்துவதும் நல்லது. அதனால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன் பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன், ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம்.

முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும்.