செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (13:49 IST)

விஷால் முதலில் திருமணம் செய்யவேண்டும்… அரசியல் வருகை குறித்து தந்தை ஜி கே ரெட்டி பதில்!

நடிகர் விஷால் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நக்கலுக்கும் ஆளானது. சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியை ஆரம்பித்த நிலையில் விஷாலின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றது.

விஷால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்து அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. சமீபத்தைய வெள்ளத்தின் போது மேயரை குறிப்பிட்டு அவர் பேசியதும் அரசியலில் கவனம் பெற்றது.

இந்நிலையில் விஷாலின் தந்தை இப்போது விஷாலின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். அதில் “விஷால் முதலில் கல்யாணம் செஞ்சிக்கனும். விஜய், அஜித் மற்றும் சூர்யா மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும். கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டு அப்புறம் அரசியலுக்கு வந்தா நல்லது.” எனக் கூறியுள்ளார்.