திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (07:27 IST)

கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி? விஷால் வெளியிட்ட வீடியோ

நடிகர் விஷால், அவருடைய தந்தை ஜிகே ரெட்டி மற்றும் விஷாலின் மேனேஜர் ஆகிய மூவரும் கொரோனா வைரஸால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
 
இந்த நிலையில் தான் கொரோனாவில் குணமாவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனது தந்தைக்கு முதலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் பணி செய்தால் எனக்கும் என்னுடைய மேலாளருக்கும் கொரோனா  வைரஸ் பாதித்தது.
 
இதனை அடுத்து நாங்கள் எங்களையே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தோம். ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நாங்கள் ஒரே வாரத்தில் குணமானோம். இந்த நேரத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றவருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் தயவு செய்து யாரும் பயப்படவேண்டாம். பயமில்லாமல் மருத்துவர்கள் தரும் பரிந்துரைகளை நாம் கடைபிடித்தால் நிச்சயம் கொரோனாவில் இருந்து குணமாகி விடலாம் 
 
இந்த வைரஸ் வந்துவிட்டது என்று பயந்தால் தான் இந்த நோய்க்கு மிகவும் மிகப்பெரிய பலவீனம். மேலும் ஆயுர்வேத மருந்தை நான் பரிந்துரை செய்ததால் ஆயுர்வேத மருந்துக்கு விளம்பரம் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஆயுர்வேத மருந்து எங்களை நன்றாக குணப்படுத்தியது என்ற எங்களுடைய அனுபவத்தை நான் மக்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்பினேன். இப்பொழுது கூட இந்த விஷயத்தை நான் சொல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது என்று விஷால் கூறினார்.
 
கடைசியாக அவர் தயவுசெய்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் யாரும் பயப்படவேண்டாம் என்றும் தைரியமாக மருத்துவர் கூறும் வழிமுறைகளை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனாவிடம் இருந்து மீண்டு விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்