தந்தைக்கு வாழ்த்து கூறிய விஷால்: ஏன் தெரியுமா
பிரபல நடிகர் விஷால் தனது தந்தை ஜிகே ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களாக பிரபல தயாரிப்பாளரும் விஷாலின் தந்தையுமான ஜிகே ரெட்டி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் உடற்பயிற்சி முறையாக செய்வது எப்படி என்பது குறித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ]
82 வயதிலும் தனது உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு காரணமே தான் உடற்பயிற்சியையும் செய்து வருவதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்
இந்த நிலையில் தந்தையின் யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களுக்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நீங்கள் நமது குடும்பத்தின் தூண் என்றும், உங்கள் உடல்நலனில் அக்கறை கொள்வதோடு அதனை அனைவருக்கும் சொல்லி கொடுப்பது பெருமை இருக்கிறது என்றும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் விஷால் கூறியுள்ளார் விஷாலின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது