வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:58 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும்.


 


விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

ஆனால் சகோதர வகையில் மனத்தாங்கல்,  பிள்ளைகளால் அலைச்சல் வரக்கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். மனைவிக்கு கழுத்து மற்றும் கை,  கால் வலி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள்,  பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரி மதிப்பார். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 7, 14
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்