திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:54 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள்.


 


ஓரளவு பணவரவு உண்டு. வாகன வசதிப் பெருகும். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பழைய நண்பர்கள்,  உறவினர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

சில நேரங்களில் பதட்டப்பட்டாலும் முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். சகோதரங்களுக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அவ்வப்போது இனந்தெரியாத கவலை,  ஏமாற்றம்,  வீண் விரையம் வரக்கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
 
கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டிய மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 2, 3, 14, 18, 29
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், பிஸ்தாபச்சை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி