விஷாலுக்கு உதவ முன்வந்த உதயநிதி…. ஆனாலும் தயாரிப்பாளர் பிடிவாதம்!
விஷால் தன் நண்பரான உதயநிதி ஸ்டாலினிடம் எனிமி வெளியீடு குறித்து உதவி கேட்டதாக சொல்லப்படுகிறது.
விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், விஷாலின் எனிமி படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது.ஆனால், எனிமி என்ற படத்திற்கு தியேட்டர்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை எனத் தயாரிப்பாளர் தெரிவித்துளார். இதற்கு அண்ணாத்த திரைப்படம்தான் காரணம் என அவர் காரணம் கூறினாலும், எனிமி திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வராததே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் இரு கதாநாயகர்களும் தங்கள் நண்பரும் அண்ணாத்த படத்தின் விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வெளியீட்டுக்கு உதவிக் கேட்டுள்ளனர். அவரும் தாங்களாக எந்த திரையையும் வலுக்கட்டாயமாக கேட்டுப் பெறுவதில்லை என்று கூறியுள்ளாராம். ஆனால் தயாரிப்பாளர் மட்டும் உதயநிதி ஸ்டாலினால் தான் எனிமி படத்துக்கு போதிய திரைகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து வருகிறாராம். மேலும் இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் வைக்க உள்ளாராம்.