1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 12 ஜூலை 2017 (21:37 IST)

தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு தளம்: வைரலாகும் சூர்யாவின் போட்டோ!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூரில் நடந்து வருகிறது. 


 
 
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சூர்யா பைக் ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று வரலாகி வருகிறது. இந்த கூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.


 


கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 
 
படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.