திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (14:40 IST)

11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேரும் பிரபுதேவா - நயன்தாரா ஜோடி...?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மார்க்கெட் நடிப்பில் உச்சத்தை தொட்ட தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளையும் அதற்கு ஈடாக சந்தித்துள்ளார். குறிப்பாக அவரது முக்கோண காதல் ஊரறிந்த உண்மை. நயனின் முதல் காதலரான சிம்புவுடன் நெருக்கமாக இருந்த லிப்லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அந்த காதல்     பிரேக்அப் ஆகிவிட பின்னர் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவை காதலிக்க துவங்கினார். பிரபு தேவாவின் மனைவி இதை ஊர் முழுக்க அம்பலப்படுத்தி நயன்தாரவை அசிங்கப்படுத்தியதால் அந்த காதலையும் முறித்துக்கொண்டார் நயன். பின்னர் தற்போது விக்னேஷ் சிவனுடன் தீவிர காதலில் இருந்து வருகிறார். இது விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சுமார் 11 வருடங்கள் கழித்து பிரபு தேவா இயக்கத்தில் புதுப்படமொன்றில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் கோலிவுட் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் விக்னேஷ் சிவன் சம்மதிப்பாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.