1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:23 IST)

விஐபி 2 கலெக்ஷன் எவ்வளவு?

தனுஷ் நடிப்பில் வெளியான ‘விஐபி 2’ படத்தின் முதல் 5 நாட்கள் கலெக்ஷன் நிலவரம் தெரிய வந்துள்ளது.


 

 
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் ‘விஐபி 2’. இந்தப் படத்தின் கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியிருந்தார். வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான ‘விஐபி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்ததால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்கிறார்கள்.

சினிமா விமர்சகர்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆனாலும், இந்தப் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பால், கணிசமான வசூலைப் பெற்றுள்ளது இந்தப் படம். தமிழ்நாட்டில் முதல் நாளில் 5.75 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 6.04 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 6.96 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. 5 நாட்கள் முடிவில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது ‘விஐபி 2’.