1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (18:32 IST)

கெளதம் மேனனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு டைம் கிடைக்குது?

இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கிவரும் கெளதம் மேனம், தயாரிப்பு, வசனம் எழுதுவது என பிஸியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்.


 

 
ஒரு உப்புமா ஹீரோவை வைத்து படமெடுப்பதற்கே படாதபாடு படுகிறார்கள் பல இயக்குநர்கள். ஆனால், தனுஷ், விக்ரம் என இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அத்துடன், ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நரகாசூரன்’, ‘பொன் ஒன்று கண்டேன்’ போன்ற படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

இன்னொரு பக்கம், ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ போன்ற படங்களின் ஆடியோ உரிமையை வாங்கி, தன்னுடைய ‘ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கிவரும் ‘கோலிசோடா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் டீஸருக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் கெளதம் மேனன். அத்துடன், சிம்பு இயக்கி, நடிக்கும் படத்தின் ஆங்கில வெர்ஷனுக்கு வசனம் எழுதுகிறார்.