வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (09:54 IST)

வினோத் இயக்கத்தில் மீண்டும் போலீஸாகும் கார்த்தி

வினோத் இயக்கத்தில் மீண்டும் போலீஸாகும் கார்த்தி

சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு போலீஸ் வேடம் என தெரிய வந்துள்ளது.


 
 
காஷ்மோரா படப்பிடிப்பை முடித்த கார்த்தி தற்போது, காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் - நவம்பரில் இதன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அதையடுத்து வினோத் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார்.
 
எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி போலீஸாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தைப் படத்திற்குப் பிறகு அவர் காக்கி உடையணியும் படம் இது என்பது முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்