இப்படி சொல்லி சொல்லியே என்ன நடக்க வச்சிட்டீங்க… தன்னையேக் கலாய்த்துக் கொண்ட AK
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் படங்களில் நடிப்பதைப் பெருமளவு குறைத்துக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற அளவிலேயே அவர் படங்கள் ரிலீஸாகின்றன. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் ஆடுகளம் நரேன் அஜித்துடன் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் “அஜித் ரொம்ப தன்னடக்கமானவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரேக்கில் வந்து என்னோட வசனம் பேசுமுறை நல்லா இல்லை என்று சொல்கிறார்கள். நான் ஒரு வசனம் பேசுறேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்றார். நான் சார் நீங்க நடந்து வந்தாலே முடிஞ்சுதுனு சொன்னேன். அதைக் கேட்டு ஆமா இப்படி சொல்லி சொல்லியே எல்லா படத்திலயும் என்ன நடக்க வச்சிட்டீங்க என ஜாலியாக சொல்லிவிட்டு சென்றார்” என தெரிவித்துள்ளார்.