வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (17:26 IST)

எனக்கு எந்த பணமும் தரவில்லை: நடிகர் விமல்

தயாரிப்பாளர் கோபி, நடிகர் விமல் மீது அளித்துள்ள மோசடி புகார் குறித்து நடிகர் விமல்  விளக்கம் அளித்துள்ளார். 

 
விமல் நடித்த மன்னார் வகையறா என்ற படத்தின் தயாரிப்பின் போது நடிகர் விமல் தயாரிப்பாளர் கோபியிடம் ரூபாய் 5 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு பதிலாக மன்னார் வகையறா படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக அவர் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் மன்னார் வகையறா படத்தின் லாபத்தில் பங்கு தராமல், தான் கொடுத்த 5 கோடி ரூபாயும் திருப்பி தரவில்லை என்றும் பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விமல் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர் கோபி புகார் மனு அளித்துள்ளார். 
 
இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விமல் கூறியுள்ளதாவது, சிங்காரவேலன் என்பவர் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. எனக்கு தயாரிப்பாளர் கோபி எந்த பணமும் தரவில்லை. போலி ஆவணங்களை தயாரித்து என்னை மோசடி செய்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.