1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (09:42 IST)

விலங்கு வெற்றியால் மீண்டும் சூடுபிடிக்கும் விமல் படங்களின் பிஸ்னஸ்!

நடிகர் விமல் நடித்து ஜி 5 திரையில் வெளியாகியுள்ள விலங்கு வெப் தொடர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விமலுக்கு ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது.

இதனால் நீண்ட நாட்களாக முடித்து வைக்கப்பட்டு வியாபாரம் ஆகாமல் இருந்த விமலின் படங்கள் எல்லாம் இப்போது தூசுதட்டப்பட்டு ஒவ்வொன்றாக வியாபாரம் ஆகிக் கொண்டு இருக்கிறது. விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.