விலங்கு வெற்றிக்குப் பிறகு மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் விமல்!
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.
இந்நிலையில்தான் அவர் நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார். தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் குறிப்பிடத்தக்க ஒரு சீரிஸாக விலங்கு அமைந்தது.
இந்நிலையில் இப்போது விமல் மீண்டும் ஒரு கிராமத்துக் கதைக்களம் கொண்ட வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். எங்கிட்ட மோதாதே என்ற படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்த வெப் சீரிஸை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கு இயக்க உள்ளார். இந்த தொடரில் பிக்பாஸ் பாவ்னி, மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் விமலுடன் நடித்துவருகின்றனர். இப்போது ஷூட்டிங் திருநெல்வேலி பகுதிகளில் நடந்து வருகிறது.