வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (20:39 IST)

''விக்ரம்'' படம் வெளியாகி ஓராண்டு நிறைவு...படக்குழு புதிய அறிவிப்பு

''விக்ரம்'' படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படத்தை இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா, நரேன், ஆகிய பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்ததிருந்தார்.  இப்படம் மிகப்பெரிய வசூல்சாதனை படைத்தது.

கடந்த  ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம்  ரூ.500 கோடி என்ற சாதனையை நெருங்கியதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றியை  நவம்பர் 7 ஆம் தேதி கலைவாணர் அரங்கில்  நடைபெற்றது. இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசளித்தார்.

இந்த நிலையில்,  விக்ரம் படம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்த புதிய அறிவிப்பு நாளை காலை 10;30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன அறிவிப்பு என்றறிய  ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.