ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 நவம்பர் 2022 (21:18 IST)

கமல்ஹாசனின் அடுத்த படம் பற்றிய தகவல் - ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படம் பற்றிய தகவல்  நாளை வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகிறது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர், ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு  புதுமைகளைப் புகுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.

இந்த நிலையில், தற்போது, ஷங்கரின் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தில் அவர்  நடித்து வரும் நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அவர், முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்று டுவிட்டர் பக்கத்தில் #RKFIActionBeginsat6PM என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.

எனவே, கமலின் அடுத்த படம்  பற்றிய தகவல் நாளை வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Edited by Sinoj