செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 12 மார்ச் 2020 (16:35 IST)

விக்ரமின் கோப்ரா படத்திற்கு கோரோனா தாக்குதல் - படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.  ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வித்தியாசமான 7 கதாபாத்திரங்களில் விக்ரம் நடிக்கும்  இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த  சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதையடுத்து ரஷ்யாவில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோன வைரஸ் பரவுதலின் காரணத்தால் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்படக்குழுவினர் வேக வேகமாக தமிழ் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து "போங்கய்யா நீங்களும் உங்க கொரானாவும்" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.