ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (13:33 IST)

கொரோனா பீதி: தேடல் பணியை முடுக்கி விட்ட கர்நாடகா!!

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2,678 பேரைத் தேடி வருகிறது கர்நாடக அரசு. 
 
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி சுமார் 3,500 பேருக்கும் அதிகமாக பலிவாங்கிவிட்டது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. 
 
இந்தியாவில் தமிழகம், உத்தரபிரதேசம், கேரளா, ஜம்மு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
 
கர்நாடகா மாநிலத்தில்  4 பேருக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேருடன் தொடர்புடைய 2,678 பேரைத் தேடி வருகிறது கர்நாடக அரசு. 
 
இவர்களை கண்டுபிடித்து அவர்களுக்குப் பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது இல்லையெனில் வைரஸ் தொற்று இருந்தால் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. 12 பேரைக் கண்டுபிடித்து சோதனை நடத்தியதில் அவர்களுக்கு கரோனா வைரஸுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்படுள்ளது. 
 
இருப்பினும் மீதமுள்ளோரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவ அவசியமான அன்றாக கருதப்படுகிறது.