வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா என்ற முக்கியமானப் படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. மேலும் படத்தின் தலைப்பு வீர தீர சூரன் எனவும் அறிவிக்கப்பட்டு படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இரண்டாம் பாகமும், அதன் பின்னர் முதல் பாகமும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விக்ரம் இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்ல முன்னால் துஷாரா விஜயன் அமர்ந்திருப்பது போல ரொமாண்டிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.