வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (13:34 IST)

தங்கலான் ரிலீஸூக்குக் காத்திருந்து சம்பளத்தை ஏற்றிய விக்ரம்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.  படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விக்ரம்முக்கு எந்த படமும் பெரியளவில் கைகொடுக்கவில்லை. அதனால் தங்கலான் படத்தை பெரிதாக நம்பியுள்ளார்.

இந்நிலையில் தங்கலான் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால், இப்போது விக்ரம் அடுத்து இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற உள்ளாராம். இதன் மூலம் மீண்டும் தன்னுடைய ஸ்டார் இமேஜை உயர்த்திக் கொண்டுள்ளார் விக்ரம்.