வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (15:28 IST)

''யாது செய்வது?....அவரின் கேள்விக்கு அஞ்சுகிறேன்;; -வைரமுத்து டுவீட்

vairamuthu
தமிழின் மூத்த படைப்பாளியும், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியருமா வைரமுத்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், அவரது கேள்விக்கு அச்சப்படுகிறேன் என்று டிவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மூத்த  பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இதுவரை 7500க்கும் அதிகமான பாடல்கள், 35க்கும் மேற்பட்ட நூல்கள் என இலக்கியத்துறையிலும் இயங்கி வருகிறார்.

இந்த நிலையில், அவரைப் போன்று அவரது இரு மகன்களான மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோரும் பாடல் மற்றும் திரைக்கதை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் சிறுவயதில்
ஆளுமைமிக்க என் தாத்தாவிடம்
கேள்விகேட்க அஞ்சுவேன்

இப்போது
தொழில்நுட்ப யுகத்தின்
குழந்தையான என் பேரனின்
கேள்விக்கு அஞ்சுகிறேன்

இரண்டு தலைமுறைகளிலும்
அச்சமே எனது ஆசாரம்
என்றாகிவிட்டது

யாது செய்வது?

"அஞ்சுவது அஞ்சல்
அறிவார் தொழில்" என்று பதிவிட்டுள்ளார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மகன் ஹைக்கூவை பற்றி இப்படி அவர் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Sinoj