செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

நடுக்கடலில் விக்ரம் படக்குழுவினரோடு லோகேஷ்… இதுவரை வெளிவராத புகைப்படம்!

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

கமல்ஹாசன் அரசியலில் பிஸி ஆனதில் இருந்து சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமலின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போது விக்ரம் படக்குழுவினரோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடலில் படகில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.