1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:08 IST)

பம்பாய் படத்தில் நடிக்கவேண்டிய விக்ரம்… வாய்ப்புப் பறிபோனது எப்படி தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான பம்பாய் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் விக்ரம்தானாம்.

நடிகர் விக்ரம் 1990 ஆம் ஆண்டே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக மாறினார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவரைப் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பம்பாய் படத்தில் கதாநாயகனாக முதலில் விக்ரம்தான் ஒப்பந்தம் ஆனாராம். ஆனால் அப்போது அவர் புதிய மன்னர்கள் படத்துக்காக தாடி வளர்த்து வந்துள்ளார். ஆனால் பம்பாய் படத்தில் நடிக்க தாடியை எடுக்கவேண்டும் என மணிரத்னம் கூறியதால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.