1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:13 IST)

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம், நயன்தாரா படம்?

விக்ரம், நயன்தாரா நித்யா மேனன் நடிப்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கிய திரைப்படம் இருமுகன். கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அந்த முயற்சியை முடிவுக்கு வந்துள்ளது
 
மிக விரைவில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தமிழில் இயக்கிய ஆனந்த் சங்கர் இந்த படத்தை இந்தியிலும் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தற்போது இயக்குனர் ஆனந்த் ஷங்கர் விஷால், ஆர்யா நடித்து வரும் எனிமி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் அவர் இருமுகன் ஹிந்தி ரீமேக்கை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. விக்ரம் வேடத்தில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன