வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (17:04 IST)

பிரமாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்! ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் துருவ நட்சத்திரம், கோப்ரா , உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் நடித்துவரும் ஒரு பிரமாண்ட படத்திலிருந்து விலகியுள்ளார்.

என்னு நிண்டே மொய்தீன் என்ற படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.விமல். இப்படத்தை அடுத்து அவர் இயக்கிவரும் படம் மாவீர் கர்ணா.மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிவருகிறது.

இப்படம்கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றாலும் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதால் இதில் கலந்துகொள்ளமுடியவில்லை  எனத் தெரிகிறது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படம் வேறு ஒரு நடிகரை வைத்து, கூர்யபுத்ரா மகாவீர் கர்ணா என்ற பெயரில் பிரமாண்டமாகத் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படம் தமிழ் , தெலுங்கு, கன்னடம் ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.