திடீர்னு வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்… வைரல் வீடியோ!
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கமலின் தீவிர ரசிகர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென வந்து அவர்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.