ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:24 IST)

துருவ நட்சத்திரம் பட ரிலீஸாக உதவி செய்த விக்ரம்… அட இது ரிஸ்க் ஆச்சே!

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் மேல் கடனாக 50 கோடி ரூபாய் வரை உள்ளதாகவும் அதை ரிலீஸூக்கு முன்னர் அடைத்தால்தான் பிரச்சனை இல்லாமல் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்திடம் கடன்பெறுவதற்காக விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளேன் என எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்து உறுதி அளித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்துதான் அந்த நிறுவனம் கௌதம் மேனனுக்கு கடனளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.