ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 அக்டோபர் 2023 (20:00 IST)

ரொம்ப நாள் கழிச்சு பிரம்மாண்டம் இல்லாத நடிப்பு! – சீயான் விக்ரம் 62 ப்ரோமோ!

Chiyaan 62
நடிகர் விக்ரமின் 62வது படத்தின் இயக்குனர் மற்றும் இதர விவரங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.



தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வருபவரும், தனக்கென தனி ரசிகர்களை கொண்டவருமாக இருப்பவர் விக்ரம். யாராலும் செய்ய முடியாத பல கடினமான கதாப்பாத்திரங்களை கூட எடுத்து செய்யும் இவரின் ஆர்வத்திற்கு அந்நியன், பிதாமகன், சேது போன்ற படங்கள் நல்ல தீனியாய் அமைந்தன.

பின்னர் பல கெட்டப்புகளில் விக்ரம் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் உடன் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கடுத்து விக்ரமின் 62வது படம் என்ன என்ற எதிர்பார்ப்பிற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற ஜனரஞ்சக ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அருண்குமார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளியான சித்தா படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த அருண்குமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படத்தில்தான் விக்ரம் அடுத்து நடிக்க உள்ளார்.

இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு சாதாரண வேட்டி, சட்டையோடு போலீஸ் ஸ்டேஷன் சென்று சில ரவுடிகளை ஒப்படைத்து விட்டு மளிகை சாமான் வாங்கி கொண்டு வீட்டுக்கு செல்லும் சாதாரண நடுத்தர குடும்ப தலைவராக விக்ரம் நடிப்பில் அசத்தியுள்ளார். இது விக்ரமின் கெரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K