ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (18:46 IST)

ஜரூர் ஆகும் துருவ நட்சத்திரம் படப் பணிகள்… ரிலீஸ் எப்போ?

விக்ரம் நடிப்பில் இப்போது பொன்னியின் செலவன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மீண்டும் தேதிகள் தந்து நடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து பணிகளை முடித்து மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.